வஞ்சிர மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
வஞ்சிர மீன்1 கிலோ
காய்ந்த மிளகாய் 5
தக்காளி3
பூண்டு10 பல்
சின்ன வெங்காயம்20
கறிவேப்பிலை1 கொத்து
சீரகம்1 டீஸ்பூன்
எண்ணெய்தேவைக்கேற்ப
வெந்தயம்1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்1 டீஸ்பூன்
சாம்பார் பொடி2 டேபிள் ஸ்பூன்
புளிநெல்லிக்காய் அளவு
சோம்பு1 டீஸ்பூன்
உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
வஞ்சிர மீனை தண்ணீரில் உப்பு சேர்த்து நன்றாக கழுவி கொள்ளவும். கழுவிய பின்பு சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
சோம்பு, காய்ந்த மிளகாய், பூண்டு இவற்றில் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.
புளியை சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் நன்றாக கரைத்து வடிகட்டி கொள்ளவும். வடித்த புளி தண்ணீருடன் அரைத்த விழுதையும் சேர்த்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கறிவேப்பிலை, சோம்பு, சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பின்பு தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ளவும். பின்னர் புளிக் கரைசலை ஊற்றி கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். பின் மீன் துண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
இப்போது மணமணக்கும் வஞ்சிர மீன் குழம்பு ரெடி...
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.😋