ஆம்பூர் மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள் :
மட்டன் அரை கிலோ
அhpசி கால் கிலோ
வெங்காயம் 4
தக்காளி 2
புதினா, கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி
எலுமிச்சை பழம் ஒன்று
மிளகாய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன்
பிரியாணி மசாலா ஒரு டேபிள் ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு தேவைக்கேற்ப
அரைக்க-1 :
பச்சை மிளகாய் - 5
இஞ்சி துண்டு - 1
பூண்டு பல் - 10
அரைக்க-2 :
முந்திரி - 10
சோம்பு - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
தாளிக்க :
ப்ரிஞ்சி இலை - 2
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
லவங்கம் - 5
நட்சத்திர மொக்கு - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப
ஊற வைக்க:
மிளகாய், தனியா கலவை - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு டேபிள் ஸ்பூன்
தயிர் - அரை கப்
மஞ்சள் பொடி - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
செய்முறை :
மட்டனை சுத்தம் செய்து ஊற வைக்கக் கொடுத்துள்ளவற்றுடன் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு மட்டனை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்ததும் மட்டனைத் தனியாகவும், தண்ணீரைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும்.
அரைக்க-1ல் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும். அத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது உப்புச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் அரை பதமாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் மேலும் சிறிது உப்புச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து வாசனை போக பிரட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்.
பிறகு வேக வைத்த மட்டனைச் சேர்த்து 5 நிமிடங்கள் பிரட்டவும்.
அரைக்க-2ல் கொடுத்துள்ளவற்றில் முந்திரியை 15 நிமிடங்கள் ஊற வைத்து சோம்பு, சீரகம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
அரைத்த முந்திரி விழுதை வதக்கிய மட்டன் கலவையில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து வதக்கவும்.
பிறகு மட்டன் வேக வைத்த தண்ணீருடன் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி 5 கப் அளவிற்கு தண்ணீரை அளந்து ஊற்றிக் கொதிக்கவிடவும். (தண்ணீரின் அளவு பயன்படுத்தும் அரிசியின் அளவைச் சார்ந்தது).
கொதிக்கத் துவங்கியதும் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் சிறு தீயில் வைத்து மூடி வேகவிடவும்.
முக்கால் பதம் வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்து அரை மணி நேரம் தம்மில் வைத்தெடுத்துப் பரிமாறவும்.
சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி தயார்.
இந்த பிரியாணியை செய்தவுடனேயே சாப்பிடுவதைவிட ஒரு மணி நேரம் தம்மில் வைத்தெடுத்துச் சாப்பிடால் மிகுந்த சுவையாக இருக்கும். 😋