Tamil samayal,new, recipe, foods,cool drink

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு செய்வது எப்படி 🤤

செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு


தேவையான பொருட்கள்:


நண்டுஅரை கிலோ
சின்ன வெங்காயம்20
மிளகாய் தூள்1 டேபிள் ஸ்பூன்
பட்டை2
பூண்டு பல்8
கத்தாpக்காய்2
தேங்காய் துருவல்அரை கப்
சீரகம்1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
தக்காளி2
சோம்பு1 டீஸ்பூன்
வெந்தயம்அரை டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை1 கைப்பிடி
கறிவேப்பிலை1 கொத்து
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

  நண்டை கழுவி சுத்தம் செய்து, உப்பு போட்டு பத்து நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்.

  சின்ன வெங்காயம், தக்காளி, கத்தாpக்காய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து தட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  பின்னர் வெங்காயம், கத்தாpக்காய், தக்காளி ஆகியவற்றை ஒரு கடாயில் போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு அதனுடன் மிளகாய் தூள், தேங்காய் விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

  காய்கறிகள் வெந்ததும் நண்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

  பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பட்டை, சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு சிவக்க வதக்கி குழம்பில் சேர்க்கவும். பின்னர் கொத்தமல்லித் தழையை சேர்த்து.

             இன்னைக்கு ஒரு பிடி 😋


Share:

காடை பெப்பர் கிரேவி செய்வது எப்படி 🤤😋

காடை பெப்பர் கிரேவி


தேவையான பொருட்கள் :

காடை 4 
பெரிய வெங்காயம் 2 
தயிர் அரை கப் 
கொத்தமல்லி ஒரு கைப்பிடி 
புதினா ஒரு கைப்பிடி 
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் 
மிளகுத் தூள் 2 டீஸ்பூன் 
கரம் மசாலா தூள் 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு தேவைக்கேற்ப 
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன் 
மல்லி தூள் 1 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் தேவைக்கேற்ப 

செய்முறை :


 காடையை சுத்தமாக கழுவி விட்டு மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கப் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். 

 காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.

 இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். 

 வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி கரம் மசாலா தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

 பிறகு காடையை போட்டு 4 நிமிடம் பிரட்டிய பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு பிரட்டவும். 

 3 நிமிடம் கழித்து மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், உப்பு போட்டு நன்கு கிளரவும்.

 அதன் பின்னர் காடையில் எல்லா மசாலாவும் ஒன்றாக சேரும்படி 5 நிமிடம் நன்கு கிளறி விடவும்.

 பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு தட்டை போட்டு மூடி காடையை 15 நிமிடம் வேக விடவும். 

 இடையில் மூடியை திறந்து பிரட்டி விடவும். 15 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றி சுருள வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.

 மேலே கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

 சுவையான காடை பெப்பர் வறுவல் ரெடி.😋
Share:

முட்டை வறுவல் செய்வது எப்படி 🤤

முட்டை வறுவல்

தேவையான பொருட்கள் :

முட்டை 3
உப்பு தேவைக்கேற்ப
மிளகாய் தூள் கால் டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் தேவைக்கேற்ப
வெங்காயம் 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் 3(நறுக்கியது)
கடுகுஅரை டீஸ்பூன்


செய்முறை :


  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகை போட்டு தாளிக்கவும்.

  பின்பு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

  நன்கு வதங்கியது முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

  முட்டை நன்கு வெந்தவுடன் இறக்கி விடவும்.
Share:

வான்கோழி பிரியாணி செய்வது எப்படி 🤤😋

வான்கோழி பிரியாணி


தேவையான பொருட்கள் :


வான்கோழி கறி 1 கிலோ
வெங்காயம் 3
தக்காளி 3 
பச்சை மிளகாய்5 
புதினா 2 கைப்பிடி அளவு
கொத்தமல்லி2 கைப்பிடி அளவு
நெய்5 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
ஏலக்காய் 7
கிராம்பு 7
இஞ்சி பூண்டு விழுது6 டீஸ்பூன்
தயிர்1 கப்
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
கரம் மசாலா 3 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள்3 டீஸ்பூன்
சோம்பு தூள்1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை3
பாசுமதி அரிசிமுக்கால் கிலோ 
உப்புதேவைக்கேற்ப
முந்திரி பருப்பு5
உலர் திராட்சை5
பாதாம் பருப்பு 5
கசகசா3 டீஸ்பூன்
தேங்காய் பால் 1 கப்


செய்முறை : 


  அரிசியை உப்பு போட்டு வேக வைத்து அரைவேக்காடாக வடித்து கொள்ளவும். நெய்யில் திராட்சை, முந்திரிப்பருப்பை வறுத்து வைக்கவும். பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் உரித்து கசகசவோடு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

  வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

  கறியில் மஞ்சள் தூள், மிளகு தூள், சோம்பு தூள், உப்பு, தயிர், கரம் மசாலா, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினாவை சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, ஏலக்காய், கிராம்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பிரிஞ்சி இலை, சிறிது கொத்தமல்லி, புதினா, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தயிர் சேர்த்து தாளிக்கவும். பின் கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். இப்போது மசாலா போட்டு பிரட்டி ஊற வைத்துள்ள கறியை சேர்த்து நன்றாக பிரட்டவும்.

  மசாலா கறியினுள் சேர்ந்த பின் அரைத்த பாதாம் விழுது, தேங்காய் பால், சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி பின் தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 20 நிமிடங்கள் வேக விடவும்.

  பிறகு கறி வெந்ததும் கறியை தனியே எடுத்து அதே குக்கரில் சாதம் அதன் மேல் கறியின் கிரேவி மீண்டும் சாதம், கிரேவி சேர்த்து அடுக்காக போட்டு அதன் மேல் கொத்தமல்லி தூவி பின் வறுத்த முந்திரி, உலர்ந்த திரட்சை சேர்த்து தூவி குக்கரை மூடி 15 நிமிடம் தம்மில் போடவும். இப்போது சுவையான வான் கோழி பிரியாணி தயார்.😋
Share:

கருவாட்டு குழம்பு | Dry Fish Curry


கருவாட்டு குழம்பு


தேவையான பொருட்கள்:


கருவாடு200 கிராம்
கத்திரிக்காய்கால் கிலோ 
உருளைக்கிழங்கு2
பச்சை மிளகாய்2
தக்காளி2
புளிஎலுமிச்சை அளவு
கடுகுஅரை டீஸ்பூன்
கறிவேப்பிலை1 கொத்து
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப

அரைக்க:
சின்ன வெங்காயம் - 1 கப்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு பல் - 4
தேங்காய் துருவல் - கால் கப்

செய்முறை :

  கருவாட்டை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். புளியை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, பின் அத்துடன் வெங்காயம், மல்லித் தூள், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.

  பின்னர் அதனை குளிர வைத்து, மிக்ஸி அல்லது அம்மியில் போட்டு, அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

  பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

  அடுத்து அதில் கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். காய்களானது நன்கு வெந்ததும் அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

  பின் அதில் புளிக் கரைசலை ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். புளிக் கரைசல் நன்கு கொதித்ததும், அதில் கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான கருவாட்டு குழம்பு ரெடி.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம்.😋
Share:

வஞ்சிர மீன் குழம்பு | Seer Fish Curry


வஞ்சிர மீன் குழம்பு


தேவையான பொருட்கள்:


வஞ்சிர மீன்1 கிலோ
காய்ந்த மிளகாய் 5
தக்காளி3
பூண்டு10 பல்
சின்ன வெங்காயம்20
கறிவேப்பிலை1 கொத்து
சீரகம்1 டீஸ்பூன்
எண்ணெய்தேவைக்கேற்ப
வெந்தயம்1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்1 டீஸ்பூன்
சாம்பார் பொடி2 டேபிள் ஸ்பூன்
புளிநெல்லிக்காய் அளவு
சோம்பு1 டீஸ்பூன்
உப்புதேவைக்கேற்ப

செய்முறை :

  வஞ்சிர மீனை தண்ணீரில் உப்பு சேர்த்து நன்றாக கழுவி கொள்ளவும். கழுவிய பின்பு சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

  சோம்பு, காய்ந்த மிளகாய், பூண்டு இவற்றில் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.

  புளியை சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் நன்றாக கரைத்து வடிகட்டி கொள்ளவும். வடித்த புளி தண்ணீருடன் அரைத்த விழுதையும் சேர்த்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கறிவேப்பிலை, சோம்பு, சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும். 

  பின்பு தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ளவும். பின்னர் புளிக் கரைசலை ஊற்றி கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். பின் மீன் துண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

  இப்போது மணமணக்கும் வஞ்சிர மீன் குழம்பு ரெடி...

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.😋
Share:

மட்டன் சுக்கா | Mutton Chukka


மட்டன் சுக்கா


தேவையான பொருட்கள் :


மட்டன் கால் கிலோ 
சீரகம் 1 டீஸ்பூன் 
மிளகாய்த் தூள் 1 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை டீஸ்பூன் 
பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் சிட்டிகை 
உப்பு தேவைக்கேற்ப 
மிளகு 2 
சீரகத்தூள் 3 டீஸ்பூன் 
எண்ணெய் தேவைக்கேற்ப


செய்முறை :


 மிளகு சீரகத்தூள் தவிர்த்து அனைத்தையும் குக்கரில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விட்டு சிம்மில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.


 பின் கறி வெந்ததும் மிளகு சீரகத்தூள் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.


 இதில் வரும் எண்ணெய் விட்டு சாதம் சாப்பிட்டால் அருமையாக இருக்கும் கறியில் தண்ணீர் இருந்தால் கொஞ்சம் வற்றவிட்டு பின் மிளகு சீரகத்தூள் சேர்க்கவேண்டும்.
Share:

ஹைதராபாத் மட்டன் பிரியாணி | Hyderabadi Mutton Biryani


ஹைதராபாத் மட்டன் பிரியாணி


தேவையான பொருட்கள் :


பிரியாணி அரிசி 2 கப் 
மட்டன் கால் கிலோ 
பெரிய வெங்காயம் 2 
பச்சை மிளகாய் 4
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன் 
சின்ன வெங்காயம் 5 (நைசாக அரைக்கவும்) 
பப்பாளி 1 சிறிய துண்டு(நைசாக அரைக்கவும்) 
தயிர் அரை கப் 
மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா அரை டேபிள் ஸ்பூன் 
பட்டை 2 
கிராம்பு 4 
ஏலக்காய் 3 
புதினா 1கைப்பிடி 
பிரிஞ்சி இலை 3 
எலுமிச்சம் பழ சாறு 1 டீஸ்பூன் 
ஜாதிக்காய்த்தூள் கால் டேபிள் ஸ்பூன் 
பால் 2 டேபிள் ஸ்பூன் 
குங்குமப்பூ சிறிது 
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன் 
முந்திரி 6 
எண்ணெய் தேவைக்கேற்ப 
நெய் தேவைக்கேற்ப 
உப்பு தேவைக்கேற்ப 


செய்முறை :

 வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.


 பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாவற்றிலும் பாதியை எடுத்து அரைத்து வைக்கவும்.


 ஒரு பாத்திரத்தில் கழுவிய மட்டன், அரைத்த பொடி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலா, வெங்காய விழுது, பப்பாளி விழுது, பிரியாணி இலை, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிது புதினா, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி 3 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.


 மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிது எண்ணெய் சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி முக்கால் பதம் வேக வைத்து வடித்து சிறிது உப்பு கலந்து வைக்கவும்.


 வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தனியாக வைக்கவும்.


 பெரிய பாத்திரத்தில் நெய், எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் ஊற வைத்த மட்டனை அப்படியே கொட்டி வதக்கவும்.


 நன்கு வதங்கிய பின் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். மட்டன் நன்கு வேக வேண்டும்.


 கொஞ்சம் கிரேவியாக இருக்க வேண்டும். அதில் வேகவைத்த சாதம், வதக்கிய வெங்காயம், மீதி புதினா, எழுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கி மூடி தம்மில் வைக்கவும்.


 பிரியாணி வெந்ததும் பாலில் குங்குமப் பூவை கரைத்து தௌpத்து மூடி வைக்கவும்.


 முந்திரியை நெய்யில் வறுத்து மேலே தூவி பறிமாற சூப்பர், சுவையான ஹைதராபாத் பிரியாணி ரெடி.


 தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தால் தம் ஆகிவிடும்.


 கத்தரிக்காய் கிரேவி, ஆனியன் ரெய்த்தாவுடன் பறிமாற சுவை கூடும்.
Share:

மட்டன் கறி குழம்பு | Mutton Curry Kuzhambu


மட்டன் கறி குழம்பு

தேவையான பொருட்கள் :

மட்டன் அரை கிலோ 
பெரிய வெங்காயம் 2 
தக்காளி 1 பெரியது 
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன் 
மட்டன் மசாலா 2 டீஸ்பூன் 
உப்பு தேவைக்கேற்ப 
வறுத்து அரைக்க: :
மல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
எண்ணெய் - தேவைக்கேற்ப 

செய்முறை :

 வறுக்க கொடுத்துள்ளவைகளை லேசாக வறுக்கவும், அடுப்பை மிதமாக வைத்து 5 நிமிடம் கருகாமல் வதக்கி ஆறவைத்து நைஸாக மிக்ஸியில் அரைக்கவும்.

 வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.

 அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும், தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.

 மட்டன், மட்டன் மசால் இரண்டும் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்த விழுதை சேர்க்கவும்,

 எல்லாவற்றையும் நன்றாக வதக்கி உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். மட்டன் வெந்ததும் இறக்கி பரிமாறலாம்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, சாதம் 😋
Share:

செட்டிநாடு சிக்கன் பிரியாணி | Chettinad Chicken Biryani

செட்டிநாடு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

சிக்கன் அரை கிலோ 
அரிசி 4 கப் 
வெங்காயம் 3 (நறுக்கியது)
தக்காளி 3
புதினா1 சிறிய கட்டு 
கொத்தமல்லி தழை 1 கைப்பிடி 
மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் 
புளித்த தயிர் கால் கப் 
தேங்காய் பால்2 கப் 
வறுத்த முந்திரி 7 
தண்ணீர் 7 கப் 
பிரியாணி இலை 2 
எண்ணெய் தேவைக்கேற்ப
வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்
மசாலாவிற்கு :
பச்சை மிளகாய் - 5
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பட்டை - 2 
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
தண்ணீர் - தேவையான அளவு 



செய்முறை :
                          முதலில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.



அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.


பின்பு சிக்கனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்து, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், புதினா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 


குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.


பின்பு அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு சிக்கனின் நிறம் மாறும் வரை வதக்கி விட வேண்டும். 


அதன் பிறகு அதனுடன் தக்காளி, புளித்த தயிர், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிரட்டி விட வேண்டும். 


பின்பு குக்கரை சிறிது நேரம் மூடி வைத்து, தீயை குறைத்து, 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.


பின்பு தேங்காய் பாலை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து, நன்கு கொதிக்க விட வேண்டும். 


கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை சேர்த்து 8 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் போட்டு குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் இறக்கி, அதன் மேல் கொத்தமல்லி தழை, முந்திரி, 1 டீஸ்பூன் எலுமிச்சஞ்சாறு சேர்த்து பரிமாறலாம். சிக்கன் பிரியாணி ரெடி!!!😋

Share:

செட்டிநாடு சிக்கன் குழம்பு | Chettinad chicken gravy

செட்டிநாடு சிக்கன் குழம்புசெய்வது எப்படி


தேவையான பொருட்கள் :


சிக்கன் அரை கிலோ
பெரிய வெங்காயம் 1
தக்காளி 3
இஞ்சி பூண்டு விழுது ஒன்றரை டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை 2 கொத்து
மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
வறுத்து அரைக்க:
தேங்காய் துருவல் - அரை கப்
காய்ந்த மிளகாய் - 6
கசகசா - 2 டீஸ்பூன்
தனியா - 5 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கிராம்பு - 1
பட்டை - 1
சோம்பு - 1 டீஸ்பூன்


செய்முறை :
                           வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, தனியா, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.


அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.


அதன் பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அனைத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.


மறுபடியும் வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


  அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக வைக்கவும்.


  சிக்கன் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.


  நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடவும். சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெடி!😋
Share:

செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல் | Chettinad Pepper Chicken Fry


செட்டிநாடு பெப்பர் சிக்கன் வறுவல்


தேவையான பொருட்கள் :

சிக்கன் அரை கிலோ
எண்ணெய் தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
தயிர் கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்


தாளிக்க :
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - அரை டீஸ்பூன்
பூண்டு பல் - 6
கறிவேப்பிலை - 2 கொத்து


அரைக்க :
காய்ந்த மிளகாய் - 2 
மிளகு - 6
தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்


செய்முறை :

  சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


  ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைக்க வேண்டும்.


  வாணலியில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.


  வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ள வேண்டும்.


  வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.


  மற்றொரு வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.


  அதன் பிறகு தாளித்தவற்றை வேக வைத்த சிக்கனுடன் சேர்த்து கலக்கி சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.😋
Share:

தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி | Thalappakattu Chicken Biryani


தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள் :

நெய் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
பாசுமதி அரிசி 2 கப்
வெங்காயம் 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் 3
இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி
புதினா 1 கைப்பிடி
கெட்டியான தேங்காய் பால் 1 கப்
தண்ணீர் 2 கப்
உப்பு தேவைக்கேற்ப


ஊற வைப்பதற்கு :

சிக்கன் - அரை கிலோ 
கெட்டியான புளிக்காத தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

பிரியாணி மசாலா பொடிக்கு :

சோம்பு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் - 4
அன்னாசிப்பூ - 1
கிராம்பு - 4 


செய்முறை :

  முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி ஓரளவிற்கு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.


  பின்பு ஒரு பாத்திரத்தில் வெட்டிய சிக்கனை போட்டு, கெட்டியான தயிர், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.


  பின்னர் சோம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். 


  பின்பு பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 


  அதன் பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும். 


  அதன் பிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.


  பின்பு ஊற வைத்துள்ள சிக்கனை அதனுடன் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வரை பிரட்டி விட்டு15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். 


  பின்னர் குக்கரில் வாணலியில் வேக வைத்த சிக்கனை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும்.


  பின்பு அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அதையும் குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும். 


  பின்பு அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி தழை, புதினா, தேங்காய் பால் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். 


  நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, தீயை அதிகரித்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும். 


  விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்தால், சுவையான தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி ரெடி!!!😋
Share:

ஆம்பூர் மட்டன் பிரியாணி | Ambur Mutton Biryani


ஆம்பூர் மட்டன் பிரியாணி


தேவையான பொருட்கள் :

மட்டன் அரை கிலோ 
அhpசி கால் கிலோ
வெங்காயம் 4 
தக்காளி 2 
புதினா, கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி 
எலுமிச்சை பழம் ஒன்று 
மிளகாய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன் 
பிரியாணி மசாலா ஒரு டேபிள் ஸ்பூன் (விரும்பினால்) 
உப்பு தேவைக்கேற்ப 

அரைக்க-1 :
பச்சை மிளகாய் - 5
இஞ்சி துண்டு - 1
பூண்டு பல் - 10 

அரைக்க-2 :
முந்திரி - 10
சோம்பு - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்

தாளிக்க :
ப்ரிஞ்சி இலை - 2
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
லவங்கம் - 5
நட்சத்திர மொக்கு - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப

ஊற வைக்க:
மிளகாய், தனியா கலவை - ஒரு டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா - ஒரு டேபிள் ஸ்பூன் 
தயிர் - அரை கப்
மஞ்சள் பொடி - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப 
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

செய்முறை :

 மட்டனை சுத்தம் செய்து ஊற வைக்கக் கொடுத்துள்ளவற்றுடன் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.


 பிறகு மட்டனை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்ததும் மட்டனைத் தனியாகவும், தண்ணீரைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும்.


 அரைக்க-1ல் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும்.


 பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும். அத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது உப்புச் சேர்த்து வதக்கவும்.


 வெங்காயம் அரை பதமாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.


 அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் மேலும் சிறிது உப்புச் சேர்த்து வதக்கவும்.


 தக்காளி வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து வாசனை போக பிரட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்.


 பிறகு வேக வைத்த மட்டனைச் சேர்த்து 5 நிமிடங்கள் பிரட்டவும்.


 அரைக்க-2ல் கொடுத்துள்ளவற்றில் முந்திரியை 15 நிமிடங்கள் ஊற வைத்து சோம்பு, சீரகம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.


 அரைத்த முந்திரி விழுதை வதக்கிய மட்டன் கலவையில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து வதக்கவும்.


 பிறகு மட்டன் வேக வைத்த தண்ணீருடன் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி 5 கப் அளவிற்கு தண்ணீரை அளந்து ஊற்றிக் கொதிக்கவிடவும். (தண்ணீரின் அளவு பயன்படுத்தும் அரிசியின் அளவைச் சார்ந்தது).


 கொதிக்கத் துவங்கியதும் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் சிறு தீயில் வைத்து மூடி வேகவிடவும். 


 முக்கால் பதம் வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்து அரை மணி நேரம் தம்மில் வைத்தெடுத்துப் பரிமாறவும்.


 சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி தயார்.


 இந்த பிரியாணியை செய்தவுடனேயே சாப்பிடுவதைவிட ஒரு மணி நேரம் தம்மில் வைத்தெடுத்துச் சாப்பிடால் மிகுந்த சுவையாக இருக்கும். 😋

Share:

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Labels

Labels

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Sample Text

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.